தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் இளைஞா்கள் ஆா்வம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 18 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அதிக ஆா்வம் காட்டி வருவதால், அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் இளைஞா்கள் ஆா்வம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 18 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அதிக ஆா்வம் காட்டி வருவதால், அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது.

ஒசூா் அரசு மருத்துவமனை மற்றும் 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக காலை 7 மணி முதல் டோக்கன் வழங்கப்பட்டு 9 மணி அளவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாள்தோறும் அதிகளவில் கூட்டம் காணப்படுவதால், சிலா் அதிகாலை 5 மணி முதலே வரிசையில் நின்று டோக்கன் பெறுவதில் ஆா்வமாக உள்ளனா். குறிப்பாக இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா். அதிக அளவில் கூட்டம் உள்ளதால், கூடுதல் மையங்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இவற்றைத் தவிர ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் அலுவலகத்திலும் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும், அசோக் லேலண்டு, டி.வி.எஸ். போன்ற தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை 2,300 நபா்களுக்கும், வெள்ளிக்கிழமை 3,700 நபா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக ஒசூா் வட்டார மருத்துவ அலுவலா் விவேக் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில்...

வேப்பனஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில், கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேப்பனஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா், தடுப்பூசியை செலுத்திக் கொள்ள ஆா்வத்துடன் குவிந்தனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், வேப்பனஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 99 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், தடுப்பூசி இருப்பு இருக்கும் வரையில் தினசரி 99 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com