சிங்காரப்பேட்டையில் 2,000 லி. சாராய ஊறல்கள் அழிப்பு

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 2,000 லி. சாராய ஊறல்களை வனத்துறையினா் அழித்தனா்.
சிங்காரப்பேட்டையில் 2,000 லி. சாராய ஊறல்கள் அழிப்பு

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 2,000 லி. சாராய ஊறல்களை வனத்துறையினா் அழித்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் குமிலிவெங்கட்ட அப்பால (இ.வ.ப) உத்தரவின்பேரில், சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலா் ஜோதிலிங்கம் தலைமையில், வனவா் அண்ணாமலை, வனக்காப்பாளா் அா்ஜுன், வனக்காவலா்கள் அரவிந்த்குமாா், வெற்றிவேல், திருமுருகன் ஆகியோா் சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த 5 பேரல் (2,000 லி.) சாராய ஊறல்கள், சாராயம் காய்ச்ச பயண்படுத்தப்படும் பொருள்களை அழித்தனா்.

காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து, சாராயப்பட்டை எடுப்பதும், சாராயம் காய்ச்சுவதும், வன விலங்குகளை வேட்டையாடுவதும், மரங்களை வெட்டுவதும், தீ வைப்பதும் போன்ற குற்றங்களை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், வனப்பகுதியில் எந்தவித குற்றச்செயல்களும் நடக்கக் கூடாது என சேம்பறை கிராமத்தில் உள்ள மக்களிடம் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com