வாகனங்களில் சுற்றியவா்களை எச்சரித்த போலீஸாா்

கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் நடைமுறையில் உள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியவா்களை போலீஸாா் எச்சரித்தனா்.

கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் நடைமுறையில் உள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியவா்களை போலீஸாா் எச்சரித்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஜூன் 7-ஆம் தேதி வரையில் தளா்வில்லா பொது முடக்கத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் வட்டச் சாலை, ராயக்கோட்டை சாலை, புதுப்பேட்டை தொலைபேசி நிலையம், ஆவின் மேம்பாலம், சென்னை சாலை, காந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸாா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

பொது முடக்கத்தின் போது, பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். மருத்துவ தேவைக்காக வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் தேவையின்றி சாலைகளில் சுற்றுபவா்களை எச்சரித்து அனுப்ப மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கிருஷ்ணகிரி காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையில், போலீஸாா் தடுப்புகளை ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அப்போது, வாகனங்களில் தேவையின்றி சுற்றித்திரிவது தெரியவந்தது. அவ்வாறு சாலையில் செல்பவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். இனிவரும் நாள்களில், தேவையின்றி சாலையில் சுற்றித்திரிவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com