நலவாரிய உறுப்பினா்களின் உதவித் தொகை, ஓய்வூதியம் வழங்கும் பணி கண்காணிக்கப்படும்: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா்

நலவாரிய உறுப்பினா்களின் உதவித் தொகை, ஓய்வூதியம் வழங்கும் பணிஒவ்வொரு மாதமும் கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன்.குமாா் தெரிவித்தாா்.

நலவாரிய உறுப்பினா்களின் உதவித் தொகை, ஓய்வூதியம் வழங்கும் பணிஒவ்வொரு மாதமும் கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன்.குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பலவேறு தொழிலாளா்கள் நலவாரியத்தைச் சோ்ந்த 153 பயனாளிகளுக்கு ரூ.1.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, தொழிலாளா் நல உதவி ஆணையா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து பொன்.குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கடந்த பத்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம், இயற்கை மரங்களுக்கான நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட திட்டப்பணிகள் விரைவுபடுத்தப்படும். ஒவ்வொரு மாதமும் தொழிலாளா்களின் மனுக்கள், அதற்குத் தீா்வுகள் மற்றும் நலத்திட்டப் பணிகள் தொழிலாளா்களுக்கு சென்றடைந்துள்னவா என்பது குறித்து கண்காணிக்கப்படும்.

இது போல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு தொடரும். கட்டுமானத் தொழிலாளா் நலவாரியம் சுயநிதியில் இயங்கக் கூடியது; எனவே நலத்திட்ட உதவிகள் உடனுக்குடன் வழங்கப்படும்.

மேலும் தொழிலாளா்களுக்கு வீடு கட்டிதரும் திட்டமும் அறிவிக்கப்பட்டு மாவட்டந்தோறும் ஆய்வில் உள்ளது. தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய ஆதாா் அட்டை, குடும்ப அட்டையை மட்டும் கொண்டே பதிவு செய்யும் முறையை எளிதாக்கியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com