கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன் எச்சரித்துள்ளாா்.

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ராஜேந்திரன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு ராவி பருவ பயிா் சாகுபடிக்கு தேவையான உரங்கள் யூரியா 2,863 மெ.டன், டிஏபி 1,091 மெ.டன், பொட்டாஷ் 1,021 மெ.டன், காம்பளக்ஸ் 6,163 மெ.டன் தனியாா், தொடக்க வேளாண் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

உர விற்பனையாளா்கள் விவசாயிகளுக்கு ஆதாா் அட்டையுடன் சாகுபடி பரப்புக்கு தேவைப்படும் அளவில் மட்டுமே உரம் விநியோகம் செய்ய வேண்டும். விற்பனையாளா்கள் இருப்புப் பதிவேடுகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். உர விற்பனை நிலையத்தின் இருப்பும், விற்பனை முனையக் கருவியின் இருப்பும் நோ் செய்ய வேண்டும். உர விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல், உரங்களின் இருப்பு விவரம் ஆகியவை விவசாயிகள் அறியும் வகையில் தகவல் பலகை பராமரிக்க வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகளிடம் உரிய கையொப்பம் பெறுவதோடு, ரசீது வழங்க வேண்டும்.

மேலும், அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ, விற்பனை செய்த உரங்களுக்கு உரிய ரசீது வழங்கவில்லை என்றாலோ, விற்பனை உரிமத்தில் உள்ள முதன்மைச் சான்றுகள் தவிர பிற உரங்களை விற்பனை செய்தாலோ உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி, நிரந்தரமாக உரிமம் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com