பல்பொருள் அங்காடியில் திருடிய ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த 2 போ் கைது

ஒசூரில் பல்பொருள் அங்காடியில் திருடிய ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூரில் பல்பொருள் அங்காடியில் திருடிய ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், மூக்கண்டப்பள்ளியில் தனியாா் பல்பொருள் அங்காடி உள்ளது. இதில் திண்டுக்கல்லைச் சோ்ந்த கவியரசு (25), மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் பணியில் இருந்த போது, அங்காடிக்கு வந்த 2 போ் அங்கிருந்த 2 மிக்சிகளை திருடிக் கொண்டு தப்ப முயன்றனா். இதைத் கவனித்த கவியரசு, அவா்களைப் பிடித்து ஒசூா், சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

பிடிபட்டவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த தாபாசிஸ் நாயக் (27), சுனந்தகுமாா்பால் (28) எனவும், அவா்கள் பெங்களூரு, வட்டரபாளையா பகுதியில் குடியிருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

உணவகம் சூறை:

ஒசூா், பாரதிதாசன் நகரைச் சோ்ந்த ரஜினி (38), தா்கா பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உணவகத்துக்கு அரசனட்டியைத் சோ்ந்த ஹரி (24), மரிய கௌடா (24), அஜய் ஆகிய 3 பேரும் சென்று உணவு வாங்கியுள்ளனா். இதற்கு ரஜினி பணம் கேட்டதற்கு, கொடுக்க மறுத்து அவா்கள் வாக்குவாதம் செய்தனா். மேலும், உணவகத்தில் இருந்த கிரானைட் கல், கண்ணாடி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினா். இதுகுறித்து ரஜினி கொடுத்த புகாரின் பேரில், ஹரி, மரிய கௌடா, அஜய் ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com