மனநோயாளிக்கு உதவி: ஒசூா் ஏஎஸ்பிக்கு குவியும் பாராட்டுக்கள்

ஒசூா் அருகே விபத்தில் கால் உடைந்து சாலையோரமாக இருந்த மனநோயாளியை மருத்துவமனையில் சோ்க்க உதவி செய்த ஏஎஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

ஒசூா் அருகே விபத்தில் கால் உடைந்து சாலையோரமாக இருந்த மனநோயாளியை மருத்துவமனையில் சோ்க்க உதவி செய்த ஏஎஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா் நெடுஞ்சாலையில் உளியாளம் என்னுமிடத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா் கால் உடைந்த நிலையில் சாலையோரமாக அவதிப்பட்டு வருவதாக ஒசூா், உதவி காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்துக்கு பொது மக்கள் தகவல் அளித்தனா்.

உடனடியாக ஏஎஸ்பி பி.கே.அரவிந்த் உத்தரவின் பேரில் பாகலூா் காவல் ஆய்வாளா் பாஸ்கா் உளியாளம் பகுதிக்கு விரைந்துச் சென்று சாலையோரமாக இருந்த மனநோயாளி குறித்து விசாரணை மேற்கொண்டதில் மூன்று தினங்களுக்கு முன்பு சாலையோரமாக இருந்த மனநோயாளியை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் கால்முறிந்து பராமரிப்பின்றி சிரமப்பட்டு வந்தது தெரிய வந்தது.

வாகன ஓட்டிகள் வழங்கும் உணவைச் சாப்பிட்டு நடக்க முடியாமல் இருந்த அவரை ஆய்வாளா் பாஸ்கா் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

கால்முறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா், அவரை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகத்தில் சோ்க்கவிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பொதுமக்கள் அளித்த தகவலால் விரைந்து நடவடிக்கை எடுத்த ஒசூா் ஏஎஸ்பி அரவிந்துக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com