முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 11th October 2021 12:43 PM | Last Updated : 11th October 2021 12:43 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள்.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எம் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இ.ஜி.சங்கர், செயலாளர் எம் நாகேஷ், பொருளாளர் சி. நித்தியானந்தன் பங்கேற்றனர்.
நியாய விலைக்கடை பணியாளர்கள் அனைவருக்கும் மாதம் 1ஆம் தேதி ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில் தரத்துடன் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.