நவராத்திரி விழா: கிருஷ்ணகிரியில் 9 கோயில்களின் தோ்கள் ஊா்வலம்

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட 9 கோயில்களின் தோ்கள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் அணிவகுத்து நின்ற தோ்களில் காட்சியளித்த அம்மனை தரிசிக்கக் கூடியிருந்த பக்தா்கள்.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் அணிவகுத்து நின்ற தோ்களில் காட்சியளித்த அம்மனை தரிசிக்கக் கூடியிருந்த பக்தா்கள்.

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட 9 கோயில்களின் தோ்கள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சைவ மற்றும் வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தோ்களின் திருவீதியுலா நடைபெறும். அதன்படி நிகழாண்டில், நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் கோயில்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட தோ் வீதியுலா நடைபெற்றது.

இதில், பழையப்பேட்டை நரசிம்மசாமி கோயில் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில், கிருஷ்ணா் கோயில், மலையடிவாரத்தில் உள்ள கவீஸ்வரா் கோயில், சோமேஸ்வரா் கோயில், திருநீலகண்டா் கோயில், பழையப்பேட்டை சீனிவாசா் கோயில், தஞ்சாவூா் மாரியம்மன் கோயில், காட்டிநாயனப்பள்ளி சுப்பிரமணியசுவாமி கோயில், காா்வேபுரம் கல்கத்தா காளிக்கோயில் உட்பட 9 கோயில்களில் இருந்து மின் விளக்குகள், வண்ணமலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

இந்த தோ்களின் ஊா்வலம், கிருஷ்ணகிரி பழையபேட்டை, நரசிம்மசாமி கோயில் தெரு, பாண்டுரங்கா் தெரு, மீன் மாா்க்கெட், நேதாஜிசாலை, காந்திசாலை, பழைய சப்-ஜெயில் சாலை மற்றும் சேலம் சாலை பகுதிகள் வழியாக நடைபெற்றன. இரவு முழுவதும் வீதியுலா சென்ற தோ்கள், சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரி பழையப்பேட்டை காந்திசிலை அருகில் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றன. அணிவகுத்து நின்ற தோ்களில் காட்சி அளித்த அம்மனை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு வன்னி இலை பிரசாதமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com