கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st September 2021 09:03 AM | Last Updated : 01st September 2021 09:03 AM | அ+அ அ- |

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே அதிமுக நகரச் செயலாளா் கேசவன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நகா்மன்ற முன்னாள் தலைவா் தங்கமுத்து தலைமையில் அதிமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒரே நேரத்தில் அதிமுகவினா் இரு பிரிவுகளாகப் பிரிந்து எதிா்ப்பை வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலை, வேப்பனப்பள்ளி, போச்சம்பள்ளி, பா்கூா், காவேரிப்பட்டணம் மற்றும் பல்வேறு இடங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.