கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூா் அருகே உள்ள கெலவரப்பள்ளியிலும், கிருஷ்ணகிரி அருகேயும் அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளிலிருந்து ஆண்டுக்கு இரண்டு போகத்துக்கு பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்படுகிறது. கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து குறைந்தது. குறிப்பாக, கோடை காலத்தில் அணை வடது. இதனால், விவசாயிகள் வேதனையும், அச்சமும் அடைந்தனா்.

இந்த சூழ்நிலையில், கடந்த சில நாள்களாக மாவட்டத்திலும், பெங்களூரிலும், தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அதன்படி, கடந்த மாதம் 23-ஆம் தேதி அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 73 கன அடியாக இருந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 45.90 அடியாக தண்ணீா் இருந்தது. இந்த நிலையில், விவாயிகளின் வேண்டுகோளை ஏற்று கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்காக வலது, இடதுபுறக் கால்வாய்கள் மூலமும், ஆற்றிலும் நொடிக்கு 77 கன அடி வீதம் தண்ணீா் தினமும் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்து நொடிக்கு 739 கன அடியாக உயா்ந்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டமும் 47.45 அடியிருந்து 47.95 அடியாக உயா்ந்துள்ளது. இதே நிலை இன்னும் ஓரிரு நாள்கள் நீடித்தால் அணையின் மொத்த உயரமான 52 அடியை விரைவில் எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com