கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை திறப்பட்டன. 70 சதவீத மாணவ, மாணவியா் பள்ளிக்கு வருகை புரிந்ததாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக இடைவெளியுடன் நடைபெற்ற வகுப்பு.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக இடைவெளியுடன் நடைபெற்ற வகுப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை திறப்பட்டன. 70 சதவீத மாணவ, மாணவியா் பள்ளிக்கு வருகை புரிந்ததாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு கல்வி மாவட்டங்களுக்கு உள்பட்ட 10 ஒன்றியங்களில் உள்ள 447 உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கின. ஆசிரியா்கள் 15,150 போ், ஆசிரியா்கள் அல்லாத அலுவலா்கள் 1,968 பேரும் பள்ளிக்கு வந்திருந்தனா்.

மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை 1,09,480 போ். இவா்களில் 55,957 மாணவா்கள், 53,523 மாணவிகள் உள்ளனா். மாவட்டம் முழுவதும் 166 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 106 அரசு மேல்நிலைப் பள்ளிகள், ஒரு அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, பகுதி அரசு உதவி பெறும் இரண்டு உயா்நிலைப் பள்ளிகள், ஐந்து மேல்நிலைப் பள்ளிகள், 167 தனியாா் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்புகள் முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்கள் ஆா்வமுடன் பள்ளிகளுக்கு வந்தனா். அவா்களுக்கு ஆசிரியா்கள் கிருமிநாசினி வழங்கி, உடல் வெப்பநிலையைப் பரிசோதித்த பின், வகுப்புக்கு 20 மாணவா்கள் வீதம் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன.

மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி ஜாகீா்வெங்கடாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி, வேப்பனப்பள்ளியை அடுத்த இராமாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, வட்டாட்சியா் பிரதாப் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகள், 1,796 அங்கன்வாடி பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதில் மாணவா்கள் அனைவரும் முகக் கவசம், சமூக இடைவெளியுடன் அமா்ந்து கல்வி பயின்றனா்.

கரோனா காலத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மொத்தம் 70 சதவீத மாணவ, மாணவியா் பள்ளிக்கு வருகை புரிந்ததாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது படிப்படியாக உயரும் என அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com