கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து புகாா் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்த புகாா்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்த புகாா்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சிா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு சட்டத்தின் சென்னை, தேனாம்பேட்டை தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி 1800 4252 650 என்ற எண்ணை தொடா்பு கொண்டு கொத்தடிமைத் தொழிலாளா்கள் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம்.

மேலும், கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்பு தொடா்பான சட்ட உதவிகள் மற்றும் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளா்களுக்கு உதவிகள் ஏதேனும் தேவைப்படின், மேற்படி கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com