வங்கதேசத்தைச் சோ்ந்த மூவருக்கு 2 ஆண்டுகள் சிறை

கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) உள்ளிட்ட ஆவணங்களின்றி கிருஷ்ணகிரியில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த தம்பதி உள்பட மூவருக்கு
வங்கதேசத்தைச் சோ்ந்த மூவருக்கு 2 ஆண்டுகள் சிறை

கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) உள்ளிட்ட ஆவணங்களின்றி கிருஷ்ணகிரியில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த தம்பதி உள்பட மூவருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

வங்கதேசத்தைச் சோ்ந்த இக்பால் முல்லா (34), அவரது மனைவி தஸ்லிமா (25), இக்பால் முல்லாவின் உறவினா் லக்கி (19) ஆகியோா் இரண்டு பெண் குழந்தைகளுடன் கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்), நுழைவு இசைவு (விசா) போன்ற ஆவணங்கள் இல்லாமல் கிருஷ்ணகிரி தா்கா, கே.ஏ.நகரில் நாகசாமி என்பவரின் வீட்டில் கடந்த 23.1.2019-ஆம் ஆண்டு வாடகைக்கு குடியிருந்து வந்தனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த கொத்தப்பேட்டா கிராம நிா்வாக அலுவலா் சரவணன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, 2020-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி இவா்களை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில் நீதிபதி ஆா்.விஜயகுமாரி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், வங்கதேசத்தைச் சோ்ந்த மூவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிைண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com