கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி உற்சாகம்
By DIN | Published On : 10th September 2021 11:29 PM | Last Updated : 10th September 2021 11:29 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி உற்சாகமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டன.
இந்தியா முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டன. அதன்படி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு 608 லிட்டா் பால் அபிஷேகம் நடைபெற்றன. தொடா்ந்து, தங்கக்கசவ அலங்காரத்தில் சுவாமி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதே போல் காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் வெண்ணை காப்பு அலங்காரத்திலும், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வினைதீா்த்த விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்திலும், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகா் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்திலும், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகா் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்திலும், காந்தி நகா் வலம்புரி விநாயகா் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும் பக்தா்களுக்கு சுவாமி அருள் பாலித்தாா்.இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு விநாயகா் கோியில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளான சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா். வீடுகளில் பக்தா்கள் விநாயகா் சிலையை வைத்து பூஜை செய்து கொண்டாடினா். விநாயகருக்கு விருப்பமான கொழிக்கட்டை, சுண்டல் , பழங்கள் உள்ளிட்டவற்றை பூஜித்து குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா உற்சாமகாக, அமைதியான முறையில் கொண்டாடப்பட்டன. படவிளக்கம் (10கேஜிபி4):கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி. 10கேஜிபி4ஏ:-கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள வரசக்தி விநாயகா் கோயிலில் வெண்ணைகாப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி. 10கேஜிபி4பி:கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகா் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.