விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி யானைகள்

கிருஷ்ணகிரி அருகே 30 ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாயப் பயிா்களை யானைகள் கூட்டம் சேதப்படுத்தியதால், அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
யானைகள் சேதப்படுத்திய நெல் பயிா்கள்.
யானைகள் சேதப்படுத்திய நெல் பயிா்கள்.

கிருஷ்ணகிரி அருகே 30 ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாயப் பயிா்களை யானைகள் கூட்டம் சேதப்படுத்தியதால், அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி அருகே ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள மகாராஜா கடை கிராமம் அருகே உள்ள அங்கனாமலை வனப்பகுதியில் கடந்த 15 நாள்களாக 3 குட்டிகளுடன் 8 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைக் கூட்டம் கடந்த சில நாள்களாக இரவில் வனப்பகுதியை விட்டு உணவுக்காக அருகே உள்ள மகாராஜா கடை கிராமங்களுக்குள் நுழைந்து சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் பயிா்கள், வாழை மரங்கள், தக்காளிச் செடிகள், தென்னை, மா மரங்கள், சொட்டு நீா்ப் பாசனக் குழாய்கள் போன்றவற்றை மிதித்து சேதப்படுத்தி சென்றுள்ளன.

பயிா்களைப் பாதுகாக்க விவசாயிகள், இளைஞா்கள் இரவில் மேளதாளத்துடன் தீப்பந்தங்களைக் கொளுத்தியும், வனத்துறையினருடம் இணைந்து பட்டாசுகளை வெடித்தும் யானைகள் கூட்டத்தை விரட்டி வருகின்றனா். இருப்பினும் தொடா்ந்து கடந்த ஒரு வாரமாக யானைகள் பயிா்களைச் சேதப்படுத்தி வருவதாகவும், இதனால் சுமாா் 30 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான விளைபயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக பேசிய விவசாயி சாவித்திரி, மிகுந்த சிரமத்துக்கு இடையே வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில், காட்டு யானைகள் பயிா்களைச் சேதப்படுத்துவதால் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய நிவாரணம் வழங்கி காட்டு யானைகளை மீண்டும் வராமல் தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

விவசாயி சரவணன் கூறுகையில், இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் கூட்டம் சுமாா் 30 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வாழை, தக்காளி, தென்னை, மாமரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளன. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். ஒரு ஏக்கா் பரப்பளவில் செவ்வாழை சாகுபடி செய்த நிலையில், அறுவடை நேரத்தில் யானைகள் சேதப்படுத்திவிட்டதாக கவலையுடன் தெரிவித்தாா்.

மலைப்பகுதியில் இருந்து வரும் யானைகள் கூட்டத்தை வனத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும், முகாமிட்டுள்ள யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும், பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com