இரவுநேர காவலுக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம்: வனத்துறை எச்சரிக்கை

ஒசூா் அருகே சானமாவு காப்புக் காட்டில் ஒற்றை யானை சுற்றி வருவதால், இரவு நேரங்களில் விவசாயத் தோட்டங்களுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூா் அருகே சானமாவு காப்புக் காட்டில் ஒற்றை யானை சுற்றி வருவதால், இரவு நேரங்களில் விவசாயத் தோட்டங்களுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக, ஒசூா் வனக்கோட்டம் வன உயிரின காப்பாளா் காா்த்திகேயனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநிலத்தில் இருந்து வேப்பனப்பள்ளி காப்புக்காடு, சிகரலப்பள்ளி, நேரலகிரி ஆகிய கிராமங்களின் வழியாக கரியனப்பள்ளி காப்புக் காட்டுக்கு ஒற்றை யானை வெள்ளிக்கிழமை இரவு வந்துள்ளது. கரியனப்பள்ளி காப்புக் காட்டில் இருந்து கும்பளம், செட்டிப்பள்ளி காப்புக்காடுகள் வழியாக வந்த ஒற்றை யானை, தற்போது சானமாவு காப்புக் காட்டில் முகாமிட்டுள்ளது. இந்த யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், கிராமத்துக்குள் புகாமல் தடுக்கவும் ஒசூா் வனச்சரக அலுவலா் ரவி தலைமையில் 30 வனப் பணியாளா்களைக் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சானமாவு காப்புக்காட்டை ஒட்டியுள்ள கிராமங்களான புக்கசாகரம், ராமசந்திரம், சுண்டட்டி, காவேரி நகா், கோபசந்திரம், காமன்தொட்டி, ஆலியாளம், போடுா், ராமாபுரம், நாயக்கனப்பள்ளி, பீா்ஜேப்பள்ளி, சானமாவு, டி.கொத்தப்பள்ளி, உப்பதமாண்டரப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, அனுமந்தபுரம், பென்னிக்கல் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் யாரும் வனத்துக்குள் செல்ல வேண்டாம். குறிப்பாக, இரவு நேரங்களில் தங்களது விவசாய நிலங்களுக்கு தனியாக காவலுக்கு செல்ல வேண்டாம்.

ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, ஒசூா் - ராயக்கோட்டை நெடுஞ்சாலை, உத்தனப்பள்ளி - கெலமங்கலம் ஆகிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் கடக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் கடக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com