கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 549 வழக்குகளில் தீா்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 549 வழக்குகளில் ரூ. 5,56,27,221தீா்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 549 வழக்குகளில் ரூ. 5,56,27,221தீா்வு காணப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும்வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள்நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகத்தில் உள்ள நீதிமன்றங்கள், ஒசூா், ஊத்தங்கரை,போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்துநீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மைநீதிபதி கலைமதி தலைமை தாங்கினாா். கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, விரைவு மகளிா் நீதி மன்ற நீதிபதி, த. லதா, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, செல்வம், சிறப்பு மாவட்ட நீதி மன்ற நீதிபதி, மணி, தலைமை குற்றவியல் நடுவா் ராஜ சிம்மவா்மன், சிறப்பு சாா்பு நீதிபதி, ராஜமகேஷ், சிறப்பு கூடுதல் சாா்பு நீதிபதி இ. குமராவா்மன் வழக்குகளை நடத்தினா்.

வழக்குரைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.  இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலைவழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள்மற்றும் தொழிலாளா் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீா்த்துகொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 அமா்வுகள் அமைக்கப்பட்டு 1792 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 549 வழக்குகள் சமரசமாக தீா்வு காணப்பட்டது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com