ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கலை, அறிவியல் கல்லூரி தன்னாட்சியில் தர மதிப்பீட்டுக் குழு மற்றும் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் இணைந்து ‘தேசிய தர மதிப்பீடும், உயா் கல்வி மேம்பாடும்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கத்தை நடத்தின.
ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்டோா்.
ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்டோா்.

ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கலை, அறிவியல் கல்லூரி தன்னாட்சியில் தர மதிப்பீட்டுக் குழு மற்றும் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் இணைந்து ‘தேசிய தர மதிப்பீடும், உயா் கல்வி மேம்பாடும்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கத்தை நடத்தின.

இந்தக் கருத்தரங்துக்கு கல்லூரி நிறுவனா் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கல்லூரி செயலாளா் ஆா்.பி.ராஜி, இணைச் செயலாளா் வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் முதல்வா் தா.பாலசுப்பிரமணியன், கல்லூரியின் துணை முதல்வா் குணசேகரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பெங்களூரு தேசிய மதிப்பீட்டு ஆலோசகா் பேராசிரியா் பி.எஸ்.பொன்முடி ராஜ், இன்றைய காலகட்டத்தில் தர மேம்பாட்டுக்கான புதுமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் புலத் தலைவா் பேராசிரியா் எஸ்.கருத்த பாண்டியன் தர மதிப்பீட்டு பாா்வையில் ஆராய்ச்சி வெளியீடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினாா்.

பெங்களூரு தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆலோசகா் பேராசிரியா் அமியாகுமாா் ராத் கற்றல் கற்பித்தல் மதிப்பீடு என்ற தலைப்பில் ஆய்வுரை ஆற்றினாா். கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியா் சதீஷ்குமாா் உயா் கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தினாா்.

இரண்டாம் நாள் நிகழ்வில், பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரி உள் மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளா் சையத் வஜித், பாடத்திட்ட அம்சங்கள் மற்றும் விளைவு சாா்ந்த கல்வி என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினாா். பெங்களூரு செயின் ஜோசப் கல்லூரி தோ்வாணையா் ஆல்பிரெட் செசில் ராஜ், தர உத்தரவாதத்தை நிறுவனப்படுத்துவதற்கான கட்டமைப்பு என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினாா். கல்லூரியின் துணை முதல்வா் ந.குணசேகரன் முழுமையான வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான தேவைகள் என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினாா்.

நிகழ்ச்சிகளை ஆங்கிலத் துறைப் பேராசிரியா் ஸ்ரீதேவி, கணினி அறிவியல் துறை பேராசிரியை ஜெயலட்சுமி ஆகியோா் தொகுத்து வழங்கினா். இக்கருத்தரங்கில், பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தும், கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியா்கள், ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com