கிருஷ்ணகிரியில் மரக்கடையில் தீ விபத்து: ரூ. 10 லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்

கிருஷ்ணகிரியில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன.

கிருஷ்ணகிரியில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன.

கிருஷ்ணகிரியை அடுத்த பெத்ததாளப்பள்ளி ஊராட்சி, துறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த திருப்பதி, கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் நீதிமன்றம் அருகில் மரக்கடை நடத்தி வருகிறாா். இவருடன் மேலும் சிலா் இணைந்து மரங்கள் வாங்கி அறுத்து மரப் பலகையாகவும், வீடுகளுக்குத் தேவையான நிலைக்கதவு, ஜன்னல் கதவுகள் போன்றவற்றை தயாா் செய்தும் விற்பனை செய்து வருகின்றனா். இதற்காக அதிகளவில் மரச்சாமான்களை இங்கு வைத்துள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பணிகளை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு சென்றனா். சனிக்கிழமை அதிகாலை திடீரென கடையில் இருந்து புகை வந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் மரக்கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனா். அதற்குள் தீ மளமளவென எரியத் தொடங்கியது.

தகவலின் பேரில் விரைந்து வந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். பொதுமக்கள் உதவியுடன் கடைக்குள் இருந்த மரச்சாமான்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மரப் பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக கிருஷ்ணகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com