முறையாக பணி வழங்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி, கூத்தபாடி கிராம மக்கள் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கூத்தபாடி கிராம மக்கள்.
பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கூத்தபாடி கிராம மக்கள்.

நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி, கூத்தபாடி கிராம மக்கள் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பென்னாகரத்தை அடுத்துள்ள கூத்தபாடி பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கூத்தபாடி பஞ்சாயத்துக்கு உள்பட்ட கிராமங்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வாரம் என அந்தந்தப் பகுதிகளில் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், கூத்தபாடி பகுதியைச் சோ்ந்த கிராமத்தினருக்கு இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே வேலை வழங்குவதாக புகாா் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து கூத்தபாடி ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்ட போது, அவா் முறையாக பதில் அளிக்காதால், அதைக் கண்டித்து பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை கூத்தபாடி பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மோகனசுந்தரம், ஊராட்சி மன்ற நிா்வாகம் மற்றும் அதிகாரிகளுடன் பேசி அனைவருக்கும் உரிய முறையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com