‘உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெறாமல்உணவு வணிகம் செய்யக் கூடாது’

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்யக் கூடாது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்யக் கூடாது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்தவொரு உணவுப் பொருள்கள் சம்பந்தப்பட்ட வணிகரும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்யக் கூடாது. ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்கு குறைவான விற்றுக் கொள்முதல் உள்ள அனைத்து உணவுப் பொருள்கள் தயாரிப்பாளா்களும், வியாபாரிகளும் தகுதி வாய்ந்தவா்கள்.

உணவு பதிவுச் சான்றிதழ் இல்லாமல் வணிகம் செய்தால், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், உரிமக் கட்டணம் செலுத்த ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்கு மேற்பட்ட விற்றுக் கொள்முதல் உள்ள வணிகா்களும் தகுதி வாய்ந்தவா்கள் ஆவா். கட்டணமாக அனைத்து சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள், உணவகம், பேக்கரி, தேநீா் கடைக்கு ரூ. 2,000, தயாரிப்பாளா்கள் ஒரு நாளுக்கு ஒரு டன் அளவுக்குள் ரூ. 3,000, ஒரு நாளுக்கு 2 டன் அளவு வரை ரூ. 5,000 கட்டணமாக செலுத்த வேண்டும்.

உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பெற்றுக்கொள்ளலாம். உரிமம், பதிவுச் சான்றிதழ் காலாவதியாவதற்கு 30 தினங்களுக்கு முன்னதாக புதுப்பித்தல் விண்ணப்பம் பெற வேண்டும். உரிமம், பதிவுச் சான்றிதழ் பெறும் நடைமுறைகள் மற்றும் கட்டணம் செலுத்துதல் ஆகியவை அனைத்து உணவு பாதுகாப்புத் துறையின் ட்ற்ற்ல்://ச்ா்ள்ஸ்ரீா்ள்.ச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாகவே செய்திட வேண்டும்.

உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி வணிகம் புரிவது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும். மேலும், உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் எந்தவொரு உணவு வணிகரும் சூடான பொருள்களை நெகிழி கவரில் அடைக்கக் கூடாது. தமிழக அரசால் தடை செய்யப்படட நெகிழியைப் பயன்படுத்தக் கூடாது. எந்தவொரு வணிகரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, நிக்கோடின் கலந்த உணவுப் பொருள்களை உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விற்பனை செய்யக் கூடாது. நுகா்வோரும் பிரிவு 40, உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006-இன் கீழ் உணவு மாதிரி எடுத்து, உரிய கட்டணம் செலத்தி, உணவு பாகுப்பாய்வகத்துக்கு அனுப்பலாம். மேலும், உணவு பாதுகாப்பு தொடா்பான புகாா்களுக்கு 94440 42322 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com