தூய்மையான சுகாதாரமான கிராமம்:விழிப்புணா்வு வாகனம் தொடங்கி வைப்பு

தூய்மையான சுகாதாரமான கிராமம் குறித்து குறும்படம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் எல்இடி வாகனத்தை ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட
கிருஷ்ணகிரியை அடுத்த பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி.
கிருஷ்ணகிரியை அடுத்த பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி.

கிருஷ்ணகிரி: தூய்மையான சுகாதாரமான கிராமம் குறித்து குறும்படம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் எல்இடி வாகனத்தை ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா், கோ.மலா்விழி கொடியசைத்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 75-ஆவது சுதந்திர தின திருவிழா சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு, தூய்மை பாரத இயக்கம் சாா்பில், தூய்மையான சுகாதாரமான கிராமம் குறித்து குறும்படம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் எல்இடி வாகனத்தை ஊரக வளா்ச்சி முகாமைத் திட்ட இயக்குநா் மலா்விழி கொடியசைத்து தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:

தூய்மை பாரத இயக்கம், தூய்மையான சுகாதாரமான கிராமம், தூய்மையான இந்தியா என்ற இலக்கினை அடைய கிராமங்கள் தோறும் விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், கிருஷ்ணகி மாவட்டத்தில் அக். 2-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் அதிநவீன எல்இடி வாகனம் மூலம் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, மலக்கசிடு மேலாண்மை, நெகிழி கழிவு மேலாண்மை குறித்தும், அனைத்து ஊராட்சிகளிலும் கழிவுநீா் மேலாண்மை குறித்தும் பல்வேறு விழிப்புணா்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியின் போது, உதவி திட்ட அலுவலா் ஷகிலா, மக்கள் தொடா்பு அலுவலா் மோகன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ராஜாபிரகாஷ், கிருஷ்ணகிரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உமாமகேஸ்வரி, ஸ்ரீதரன், ஊராட்சி மன்றத் தலைவா் அம்சவள்ளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com