கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.19) நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.19) நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் 510 மையங்களில் நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் என 442 மையங்களிலும், 61 அரசு ஆரம்ப சுகாதார மையங்களிலும், 6 அரசு மருத்துவமனைகளிலும், இஎஸ்ஐ மருத்துவமனை என மொத்தம் 510 மையங்களில்கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், குந்தாரப்பள்ளி, சோமநாதபுரம் ஆகிய மையங்களில் நடந்த கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தாா். அப்போது அவா் தெரிவித்தது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடைபெற்று வரும் இரண்டாவது கட்ட தடுப்பூசி செலுத்தும் முகாமில் காலை 7 மணி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாலைக்குள் கோவிஷீல்டு 34,100 தடுப்பூசிகள், கோவேக்சின் 15,450 தடுப்பூசிகள் என 49,550 தடுப்பூசிகள் போடப்படும்.

இந்த முகாம்களில் அரசு மருத்துவா்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை செவிலியா்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும், சுகாதார பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் பொதுமக்களை மையங்களுக்கு அழைத்து வரும் பணிகளையும், கல்வித்துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com