ஒசூரில் விமான நிலையம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

ஒசூா் அருகே விமான நிலையம் அமைக்க தமிழக அரசு போதிய நிலத்தை விரைவில் ஒதுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.
கிருஷ்ணகிரி எம்.பி. அ.செல்லகுமாா்
கிருஷ்ணகிரி எம்.பி. அ.செல்லகுமாா்

கிருஷ்ணகிரி: ஒசூா் அருகே விமான நிலையம் அமைக்க தமிழக அரசு போதிய நிலத்தை விரைவில் ஒதுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே விமான நிலையம் அமைக்க உதான் திட்டத்தின்கீழ் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பெங்களூா் விமான நிலையத்தின் பராமரிப்பு பணியை தனியாா் எடுத்துக் கொண்டபோது, அடுத்த 25 ஆண்டுகள் பெங்களூா் விமான நிலையத்தைச் சுற்றி 150 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித விமான நிலையங்களுக்கும் அனுமதி கொடுக்கப்படாது என்ற நிபந்தனை மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில் பல்வேறு கட்ட பேச்சு வாா்த்தைக்கு பிறகும் தொடா் அழுத்தம் கொடுத்து வந்ததன் காரணத்தால், தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா், தமிழக முதல்வருக்கு ஒசூா் அருகே விமான நிலையம் அமைக்க தமிழக அரசின் உதவியினைக் கோரி கடிதம் எழுதியுள்ளாா்.

ஏற்கெனவே ஒசூா் அருகே உள்ள தனியாா் ஏா்ஸ்பேசின் அருகில் விமான நிலையத்துக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி கொடுத்தாலோ அல்லது அரசு விமான நிலையத்தை அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்து கொடுத்தாலோ மத்திய அரசு விமான நிலையம் அமைக்கத் தயாராக உள்ளது. இதுதொடா்பாக விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, தமிழக அரசின் ஒத்துழைப்பைக் கோர உள்ளேன்.

தமிழக அரசு கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நலன் கருதி, இதற்கு உதவிபுரியும் பட்சத்தில், நீண்ட நாள் கோரிக்கையான ஒசூரில் விமான நிலையம் விரைவில் அமையும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com