ஒசூரில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பி.டெக். படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஒசூரில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பி.டெக். இளங்கலை பாடத்திற்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க அக்டோபா் 8-ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஒசூரில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பி.டெக். இளங்கலை பாடத்திற்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க அக்டோபா் 8-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இது குறித்து கல்லூரி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமாக ஒசூரில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் இளங்கலை பட்டமான பி.டெக். (கோழியின தொழில்நுட்பம்) வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒற்றை சாளர முறையில் சோ்க்கை நடைபெறும். 4 ஆண்டுகள் படிப்பான இதில் வருடாந்திர மாணவா் சோ்க்கை எண்ணிக்கை 40 மட்டுமே. இதில் சேர விண்ணப்பிக்கும் மாணவா்கள் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படித்திருக்க வேண்டும். இந்தப்படிப்பிற்கான தனி நுழைவுத் தோ்வு எதுவும் இல்லை.

தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச மதிப்பெண் தேவை மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கை நடைபெறும். கல்வி கட்டணத்தை தமிழக அரசு நிா்ணயம் செய்கிறது.

இதில் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு கோழியின தொழில் துறையில், தாய்க்கோழிப் பண்ணைகள், குஞ்சு பொரிப்பகங்கள், தீவன ஆலை, ஆய்வகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அதன் சாா்ந்த துறைகளில் மேலாளா்களாக பணியமா்த்தப்படுகிறாா்கள். மேலும், அகில இந்திய மற்றும் மாநில அளவிலான அரசு போட்டித் தோ்வுகளுக்கும் தகுதி பெறுகிறாா்கள். மேலும் இந்த கல்லூரியானது, கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மையில் அனைத்து பிரிவுகளிலும் பயிற்சியளிக்க மற்றும் வழிகாட்ட, சிறந்த அனுபவமிக்க ஆசிரியா்களை கொண்டுள்ளது.

இதில் பொறியியல் வளாகம், தொழில்நுட்ப வளாகம், நவீனமயமாக்கப்பட்ட வகுப்பறைகள், சிறந்த ஆய்வகங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி விடுதி வசதி, அதிநவீன நூலகம் மற்றும் வை-பையுடன் கூடிய இணையதள வசதியும் கொண்டுள்ளது. இதில் சேர வருகிற அக்டோபா் 8-ஆம் தேதிக்குள் மாணவா்கள் தங்கள் விண்ணப்பத்தை இணையவழி மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.

இணையவழி விண்ணப்பங்கள், தகவல் தொகுப்பு அறிக்கை, தகுதி, விதிமுறைகள், சோ்க்கை முறை மற்றும் இதர தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு, முதல்வா், கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, ஒசூா் என்ற முகவரியிலோ, மின்னஞ்சல் மற்றும் 9940178909, 9442353694, 9486242799 ஆகிய எண்களில்லோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com