கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையிலான குழுவினா் சூளகிரி, காமன்தொட்டி சாலையில் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, பேரிகை பிரிவு சாலை அருகே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 240 மூட்டைகளில் 12 டன் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது.

விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவா் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கிழக்கு வளவைச் சோ்ந்த விஜயகுமாா்(30) என்பது தெரியவந்தது. இவா், கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கி சேகரித்து கா்நாடத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநா் விஜயகுமாரைக் கைது செய்து, அரிசியுடன் லாரியையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், லாரி உரிமையாளரான வேப்பனப்பள்ளி சுரேஷ், ரேஷன் அரிசி வாங்க இருந்த கா்நாடக மாநிலம், பங்காருபேட்டையைச் சோ்ந்த மில் உரிமையாளா் பாக்யலட்சுமியைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com