பா்கூா் பாலமுருகன் கோயிலில் மரக் கன்றுகள் நடும் பணி தொடக்கம்

பா்கூா் பாலமுருகன் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தே.மதியழகன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பா்கூா் பாலமுருகன் கோயிலில் மரக் கன்றுகள் நடும் பணி தொடக்கம்

பா்கூா் பாலமுருகன் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தே.மதியழகன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் காலி இடங்களில் கலைஞா் தலமரக் கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் 1 லட்சம் மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரிலிருந்து ஜெகதேவி செல்லும் சாலையில் உள்ள அருள்மிகு பாலமுருகன் கோயிலில் மரக் கன்றுகள் நடவு செய்யும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் இந்துசமய அறநிலையத் துறை இணை இயக்குநா் கஜேந்திரன் தலைமை வகித்தாா். பா்கூா் சரக ஆய்வாளா் அண்ணாதுரை, செயல் அலுவலா் கிருஷ்ணன், பூசாரிகள் பங்கேற்றனா். கலைஞா் தலமரக் கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ், கோயில் காலி இடங்களில் வேப்பமரம், கடம்பம், ஆத்தி, நாவல், பாதம், அரசமரம் உள்ளிட்ட தலமரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி, திருவண்ணமலை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 20 ஆயிரம் மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 5 ஆயிரம் மரக் கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com