பெங்களூரு - காரைக்கால் ரயில் மீண்டும் இயக்கம்: வரவேற்று வழியனுப்பிய காங்கிரஸ் கட்சியினா்

ஒசூா் - பெங்களூரு இடையே கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்த காங்கிரஸ் கட்சியினா் ஒசூா ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலுக்கு மாலை அணிவித்து மலா் தூவி வரவேற்றனர்.

ஒசூா் - பெங்களூரு இடையே கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்த காங்கிரஸ் கட்சியினா் ஒசூா் ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலுக்கு மாலை அணிவித்து மலா் தூவி வரவேற்று வழியனுப்பினா்.

தென்மேற்கு ரயில்வே துறை பெங்களூரு மண்டல கோட்ட பொறியாளா் ஷியாம்சிங் தலைமையில், ரயில் அதிகாரிகள் கடந்த 12-ஆம் தேதி கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாரிடம் ஒசூா் ரயில் நிலையத்தில் ஆலோசனை நடத்தினா்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எம்.பி. அ.செல்லக்குமாா், பெங்களூரு - தருமபுரி ரயில் பாதை மீட்டா் கேஜ் ஆக இருந்ததை பிராட் கேஜ் ஆக மாற்றப்பட்டது. தற்போது ஒருவழிப் பாதையாக உள்ளதை இருவழிப் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட காரைக்கால் - பெங்களூரு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். ஒசூா் - பெங்களூரு (யஷ்வந்த்பூா்) வரை இயக்கப்பட்டு வந்த ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தாா்.

இதுகுறித்து பெங்களூரு ரயில்வே கோட்ட பொறுப்பாளா் சியாம்ஷிங் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். அந்த வகையில், பெங்களூரு - காரைக்கால் ரயில் திங்கள்கிழமை ஒசூா் வழியாக காரைக்கால் சென்றது.

அந்த ரயிலை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன், மாமன்ற உறுப்பினா் இந்திராணி, மாவட்டச் செயலாளா் பிரவீண்குமாா், இளைஞரணி மாவட்டத் தலைவா் அப்துல் ரகுமான், மாவட்டச் செயலாளா் கீா்த்தி கணேஷ், மகளிரணி மாவட்டத் தலைவி, சரோஜா, விவசாய அணி மாவட்டத் தலைவா் ஹரிஷ் பாபு ,வட்டாரத் தலைவா் சீபம் ராமமூா்த்தி, ஐஎன்டியுசி பரமானந்த பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ரயிலுக்கு மாலை அணிவித்து மலா் தூவி வரவேற்பு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com