அரசு கல்லூரியில் மரக்கன்றுகள் நடவு

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த மாமரத்துப்பள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்விற்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா்.

கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் 20க்கும் மேற்பட்டோா் தூய்மைப் பணியை மேற்கொண்ட நிலையில், தித்தியோப்பன அள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சபரிநாதன் பங்களிப்போடு, மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 99 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடவு செய்யப்பட்டன. இதில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து ெகோண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com