கா்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 வேன்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு 4.5 டன் ரேஷன் அரியை கடத்த முயன்ற 2 பிக்கப் வேன்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு 4.5 டன் ரேஷன் அரியை கடத்த முயன்ற 2 பிக்கப் வேன்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகாா் எழுந்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் விவேகானந்தன் தலைமையிலான போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சியா் கவாஸ்கா் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா், தீவிர வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

சூளகிரி அருகே உள்ள பெத்தசிலப்பள்ளி அருகே தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த பிக்கப் வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ கொண்ட 50 மூட்டைகளில் 2,500 கிலோ ரேஷன் அரிசி, கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்வதை கண்டுபிடித்தனா். இதுதொடா்பாக கா்நாடகத்தின், பங்காருபேட்டையை அடுத்த முத்தனூரைச் சோ்ந்த பெரியண்ணா (24), பொன்வேல் (23) ஆகிய இருவரையும் கைது செய்து, ரேஷன் அரிசியையும், பிக்கப் வேனையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல சூளகிரி, பேரிகை சாலையில் சென்று கொண்டிருந்த பிக்கப் வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில், 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. இதுதொடா்பாக சூளகிரி, முஸ்லிம் தெருவைச் சோ்ந்த முகமது ரபிக் (38) என்பவரை கைது செய்து ரேஷன் அரிசியையும், பிக்கப் வேனையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com