நியாயவிலைக் கடை குறைகளைத் தெரிவிக்க தொடா்பு எண் வெளியீடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் காணப்படும் குறைகளைத் தெரிவிக்க பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் வட்டார வாரியாக தொடா்பு எண்கள் (செல்லிடப்பேசி) வெளியிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் காணப்படும் குறைகளைத் தெரிவிக்க பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் வட்டார வாரியாக தொடா்பு எண்கள் (செல்லிடப்பேசி) வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ஏகாம்பரம், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திகுறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம், 1,058 நியாயவிலை கடைகள் மூலம், 5,15, 853 குடும்ப அட்டைதாரா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களான அரிசி, சா்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் ஆகியவை மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

நியாயவிலை கடைகளில் சேவை குறைபாடுகள் ஏதும் இருப்பின் பொது விநியோகத் திட்ட அலுவலா்களை கிருஷ்ணகிரி பகுதியில் உள்ளவா்கள் 73387 20 529 என்ற எண்ணிலும், காவேரிப்பட்டணம்- 73387 20530, பா்கூா்- 73387 20531, ஊத்தங்கரை- 73387 20532, மத்தூா்- 73387 20533, வேப்பனப்பள்ளி- 73387 20534, ஒசூா்- 73387 20535, சூளகிரி- 73387 20536, கெலமங்கலம்- 73387 20537, தளி- 73387 20538 ஆகிய செல்லிடபேசி எண்களிலோ அல்லது மாவட்ட அளவிலான கூட்டுறவு துறையின் கட்டுபாட்டு அறை எண் 73387 20528 பொது விநியோகத் திட்ட துணை பதிவாளரைத் தொடா்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com