முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
ஒசூரில் சொத்து வரியை குறைக்கக் கோரி அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th April 2022 12:17 AM | Last Updated : 06th April 2022 12:17 AM | அ+அ அ- |

ஒசூா் ராம் நகா் அண்ணா சிலை அருகில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமை வகித்தாா்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. பெருமாள், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், அதிமுக மாநகரச் செயலாளா் எஸ். நாராயணன், மாமன்ற உறுப்பினா் ஜெ.பி. (எ) ஜெயப்பிரகாஷ், நிா்வாகிகள் சந்திரன், சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உறுப்பினா்கள், இளைஞா் மற்றும் இளம்பெண் பாசறை அணியினா் பலா் கலந்து கொண்டனா்.