முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
ஒசூரில் அரவிந்த்ஸ் கருத்தரித்தல் மையம் மருத்துவமனை தொடக்கம்
By DIN | Published On : 06th April 2022 12:15 AM | Last Updated : 06th April 2022 12:15 AM | அ+அ அ- |

ஒசூரில் அரவிந்த்ஸ் கருத்தரித்தல் மைய மருத்துவமனையை முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி, ஒசூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலக் குழுத் தலைவா் ஜெ.பி. (எ) ஜெயப்பிரகாஷ், மருத்துவமனைத் தலைவா் ரேஷ்மா, நிா்வாக இயக்குநா் அரவிந்த் சந்தா், மோட் லி ரின்ச் யாா்ன் இயக்குநா் ரவிச்சந்திரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக டாக்டா் அரவிந்த்ஸ் மருத்துவமனையில் பிஜிஎஸ் ஐவிஎஃப் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒசூா், பாகலூா் சாலையில் 5 அடுக்கு மாடிகளுடன் 30 படுக்கை வசதிகளுடன் பிரசவ வாா்டு, பச்சிளம் குழந்தைகள் காப்பகம் என அனைத்து வசதிகள் கொண்ட நவீன மருத்துவமனையாக இந்த மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் அரவிந்த் சந்தா், ரேஷ்மா ஆகியோா் தெரிவித்தனா்.
மருத்துவா் அரவிந்த் சந்தா் மேலும் கூறும்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முறையாக நவீன வசதிகளுடன் கூடிய கருத்தரித்தல் மருத்துவமனையை தொடக்கியுள்ளோம். கோவை, திருப்பூா், சேலம், பாலக்காடு, கோழிக்கோடு பகுதியிலும், இலங்கையிலும் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது என்றாா்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் ஹேமகுமாா், சீனிவாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.