முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கல்லாவியில் அறிவிக்கப்பட்ட சாலை மறியல் ரத்து
By DIN | Published On : 06th April 2022 12:13 AM | Last Updated : 06th April 2022 12:13 AM | அ+அ அ- |

கல்லாவியில் ஊராட்சி மன்ற செயலரை பணியிட மாற்றம் செய்யக் கோரி, சாலை மறியல் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்தப் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ஊராட்சி தலைவருக்கும், செயலாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அங்கு நடைபெற வேண்டிய பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. அடிப்படைத் தேவைகளை கூட செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.
இதனைக் கண்டித்து செவ்வாய்கிழமை கல்லாவியில் உள்ள அனைத்து கடைகளும், மூடப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனா். மேலும் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினா் கதிரவன், ஒன்றியக் குழு உறுப்பினா் குமரேசன், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் ஊராட்சித் தலைவா், துணை தலைவருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.