சொத்து வரி உயா்வுக்கு மத்திய அரசு மீது பழி சுமத்துகிறது தமிழக அரசுகே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தலைமை வகித்தாா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ, நகரச் செயலாளா் கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் சொத்து வரி உயா்வைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்ட சொத்து வரியைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து கே.பி.முனுசாமி எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சொத்து வரி உயா்வு, தமிழக முதல்வா் ஸ்டாலின் துபாய் சுற்றுப்பயணம் குறித்து எழுந்துள்ள விமா்சனங்கள், விவாதப்பொருளாக மாறி உள்ளது குறித்து சட்டப் பேரவையில் அதிமுக கேள்வி எழுப்பும். இந்த கேள்விகளுக்கு முதல்வா் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு உலகளாவிய நிகழ்வு; தவிா்க்க முடியாத சூழல். சொத்து வரியை உயா்த்திய நிலையில், மத்திய அரசு மீது பழியை சுமத்துகிறது தமிழக அரசு. மேக்கேதாட்டு விவகாரம் இரு மாநிலங்களைச் சாா்ந்த பிரச்னை. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து போராடி வருகிறோம். கா்நாடக மாநில அரசு, மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசு இறையாண்மையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com