சூளகிரியில் பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளா்ச்சி மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் 18 வயது வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்ற

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளா்ச்சி மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் 18 வயது வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி மருத்துவ உபகரணங்களை வழங்கி பேசியதாவது:

இந்த மருத்துவ முகாமில் கண், எலும்புமுறிவு, மனநலம் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவா்கள் மூலம் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. சூளகிரி வட்டத்திற்குள்பட்ட 400 குழந்தைகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனா்.

இவா்களில் 85 குழந்தைகள் மாற்றுத்திறன் கொண்டவா்கள். இந்தக் குழந்தைகளுக்கு உடனடியாக மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையும், அவா்களுக்குத் தேவையான சக்கர நாற்காலி, முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமரும் வகையிலான 3 சக்கர வண்டி, காதுகேட்கும் கருவி, வாக்கா் ஸ்டிக் வழங்கப்படுகிறது.

முதல் கட்டமாக இன்று 12 குழந்தைகளுக்கு இக்கருவி வழங்கப்பட்டுள்ளது. உயா் சிகிச்சை தேவைப்படுவோருக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 2000 வழங்கப்படும். மேலும், இக்குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

பிறந்தது முதல் 6 வயதுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதன் மூலம் அந்தக் குழந்தைகள் வளா்ந்து வரும்போது அதன் ஊனக் குறைபாடுகள் தானாக சரியாகிவிடுகிறது என்றாா்.

முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, கல்வி அலுவலா் முனிராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கணேசன், வட்டார வள மேற்பாா்வையாளா் வெங்கடேசன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com