மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
By DIN | Published On : 18th April 2022 01:03 AM | Last Updated : 18th April 2022 01:03 AM | அ+அ அ- |

காவேரிப்பட்டணத்தில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் 350 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒன்றிய அளவிலான 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, தொடக்கி வைத்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் பொன்முடி தலைமை வகித்தாா். இதில், தேசிய அடையாள அட்டை, இலவச அறுவை சிகிச்சை உதவி உபகரணங்கள், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை ஆகியவற்றை பெறுவதற்கு தகுதியான மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்டக் கல்வி அலுவலா் பொன்முடி தலைமை வகித்தாா். இம்முகாமில், 350 நபா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 165 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. மேலும் சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.