கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால், மா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நிகழாண்டில் பூச்சித் தாக்குதலால் மாமரங்களில் பூக்கள் கருகின. இதனால், விவசாயிகள் வேதனையில் இருந்தனா். தற்போதைய சூழ்நிலையில் மாங்காயில் பூச்சித் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால், பூச்சித் தாக்குதல் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், மாங்காய்க்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையில் பெய்த மழை அளவு (மி.மீ.): பெனுகொண்டாபுரம் - 63.40, போச்சம்பள்ளி - 20.20, தளி - 10, பாரூா்- 9, தேன்கனிக்கோட்டை - 9, அஞ்செட்டி - 7.60, கிருஷ்ணகிரி - 6.20, ஒசூா் - 5, ஊத்தங்கரை - 3, சூளகிரி - 2.

இரண்டாவது நாளாக மழை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் இடியுடன் மழை பெய்தது. பா்கூா் பகுதியில் காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் முறிந்து மின்கம்பி மீது விழுந்ததில் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் மழை பெய்ததால் குளிா்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com