கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் பிரங்கி கல் குண்டுகள் காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் இந்த மாத சிறப்பு காட்சிப் பொருளாக பீரங்கியின் கல் குண்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் பிரங்கி கல் குண்டுகள் காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் இந்த மாத சிறப்பு காட்சிப் பொருளாக பீரங்கியின் கல் குண்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஜெகதேவி, மகாராஜ கடை, தட்டக்கல், வீரபத்ரதுா்க்கம், நாகமலை, மல்லிகாா்ஜுன துா்க்கம் ஆகிய மலைகளில் கோட்டைகள் உள்ளன. மண்ணால் ஆன தரைக்கோட்டைகள் இருந்ததற்கான தடயங்களும் சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

பீரங்கி கல் குண்டுகள் தயாரிக்க உறுதியற்ற கருங்கற்களே தோ்ந்தெடுக்கப்படுகின்றன. ஏனெனில் அவைதான் பீரங்கியிலிருந்து வெடிமருந்தின் உதவியுடன் வேகமாக வெடித்து சிதறும்போது எளிதில் பல சிறு துண்டுகளாக உடைந்து பலரை ஒரே நேரத்தில் தாக்கி, எதிரிகளை வெல்ல பயன்படுத்தப்பட்டன.

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரங்கி கல்குண்டுகள் சிறிய அளவுடையது. இவை, 10 செ.மீ. விட்டமும், 2 கிலோ எடையும் கொண்டது என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com