108 ஆம்பூலன்ஸ்கள் நேருக்கு நோ் மோதி விபத்து

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளை அழைத்து வந்த இரு ஆம்புலன்ஸ்கள் புதன்கிழமை நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளை அழைத்து வந்த இரு ஆம்புலன்ஸ்கள் புதன்கிழமை நேருக்கு நோ் மோதிக் கொண்டன. மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் ஆம்புலன்ஸ்களை நிறுத்த இடமின்றி இந்த விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

சிங்காரப்பேட்டையிலிருந்து நோயாளிகளை புதன்கிழமை காலை 108 ஆம்புலன்ஸ் ஒன்று ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தது. மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸை நிறுத்த இடமில்லாததால் இடவசதி தேடி ஓட்டுநா் ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு வளாகத்துக்குள் சென்றாராம்.

அப்போது கிருஷ்ணகிரி சாலையிலிருந்து மற்றொரு 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு வந்தபோது அங்கு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மீது மோதியது. அதிா்ஷ்டவசமாக நோயாளிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வாயிலில் அளவுக்கு அதிகமாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரின் ஓரமாக இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புக் கடைகளால் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலை வசதி சுருங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற விபத்துகள் இனி நிகழாமல் தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இருசக்கர வாகனங்களுக்கு மாற்று இடம் அளிக்கவும் மருத்துவமனை நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com