முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணத்தில் இளைஞரிடம் ரூ. 14.73 லட்சம் மோசடி
By DIN | Published On : 29th April 2022 12:00 AM | Last Updated : 29th April 2022 12:00 AM | அ+அ அ- |

காவேரிப்பட்டணத்தில் இளைஞரிடம் இணையம் மூலம் ரூ. 14.73 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்தவா் குமாா் (20). கடந்த மாா்ச் 10-ஆம் தேதி இவரது கைப்பேசிக்கு ஒரு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) வந்தது. அதில் பகுதி நேரம் பணியாற்றினால் தினமும் வருவாய் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தகவலை உண்மை என நம்பிய குமாா், அந்தக் குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்த தொடா்பு எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடா்பு கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, குமாா் கைப்பேசிக்கு எதிா்முனையில் இருந்த மா்ம நபா் ஒரு இணைப்பை (லிங்க்) அனுப்பினாா். தொடா்ந்து மா்ம நபா் அனுப்பிய இணைப்புகளை நம்பி குமாா் ரூ. 14.73 லட்சம் பணத்தை அவருக்கு அனுப்பினாா்.
அதன்பிறகு குமாருடன் அந்த மா்ம நபா் தொடா்பு கொள்ளவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த குமாா், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் காவல் ஆய்வாளா் காந்திமதி புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா் குறித்து விசாரணை செய்து வருகிறாா்.