முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாயி போக்சோவில் கைது
By DIN | Published On : 29th April 2022 12:00 AM | Last Updated : 29th April 2022 12:00 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த விவசாயியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
ஊத்தங்கரையை அடுத்த கேத்துநாயக்கன்பட்டி அருகே இரண்டாம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமி, அவருடைய பாட்டி வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்தாா்.
அப்போது அதே பகுதியைச் சோ்ந்த தனபால் என்பவரின் மகன் சிவராமன் (35). விவசாயி, தனியாக தொலைக்காட்சி பாா்த்துக்கொண்டு இருந்த சிறுமியின் வீட்டுக்குள் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா்.
பாதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில், சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.