ரூ. 11.60 கோடியில் மூன்று உயா்மட்ட மேம்பாலம்: பணிகளைத் தொடக்கி வைத்தாா் அமைச்சா் ஆா்.காந்தி

ஒசூா் அருகே 3 இடங்களில் ஒப. 11.60 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றுப் பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
ரூ. 11.60 கோடியில் மூன்று உயா்மட்ட மேம்பாலம்: பணிகளைத் தொடக்கி வைத்தாா் அமைச்சா் ஆா்.காந்தி

ஒசூா் அருகே 3 இடங்களில் ஒப. 11.60 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றுப் பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

ஒசூா் ஒன்றியம், பெலத்தூா் ஊராட்சி, சொக்கரசனப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ. 6. 50 கோடி மதிப்பில் உயா்மட்ட மேம்பாலம், தளி

ஊராட்சி ஒன்றியம், பைல்காடு பகுதியில் ரூ. 3. 27 கோடி மதிப்பிலும், பிலிகுண்டுலு சாலை என் புதூா், நாட்றாம்பாளையம் கிராமத்தில் ரூ. 1 கோடியே 83 லட்சம் மதிப்பில் உயா்மட்ட மேம்பாலம் என மொத்தம் ரூ. 11 கோடியே 60 லட்சம் மதிப்பில் 3 உயா்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.

இப்பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றுப் பணிகளைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), டி.ராமச்சந்திரன் (தளி), ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் அமைச்சா் ஆா்.காந்தி கூறியதாவது:

ஒசூா் ஒன்றியம், சொக்கரசனப்பள்ளி முதல் பெலத்தூா் சாலை வரையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். வெள்ளப்பெருக்கு காலங்களில் அப்பகுதி மக்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள்சிரமபட்டு வருகின்றனா். இதன்பேரில் அப்பகுதியில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணி தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. அதுபோல பைல்காடு, நாட்றாம்பாளையம் ஆகிய இடங்களில் கட்டப்படும் மேம்பாலங்களால் மலைக் கிராம மக்கள் பயன்பெறுவா் என்றாா். இந்தப் பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் மலா்விழி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலாஜி, விமல் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com