கிருஷ்ணகிரியில் சரக அளவிலான விளையாட்டுப் போட்டி
By DIN | Published On : 24th August 2022 02:23 AM | Last Updated : 24th August 2022 02:23 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
கிருஷ்ணகிரி நகராட்சி மேல்நிலைப் பள்ளி சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலா் ஆனந்தன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதில், கைப்பந்து, கோ-கோ, வளைகோல் பந்து, கால்பந்து, கையுந்து பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து, தடகளம் என 14, 17, 19 வயதுக்கு உள்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில், கிருஷ்ணகிரி சரகத்துக்கு உள்பட்ட அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டிகளை நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சூசைநாதன், பள்ளி உடற்கல்வி ஆசிரியா் சுப்புராஜ் உள்ளிட்டோா் ஒருங்கிணைக்கின்றனா்.