கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் இருசக்கர வாகனப் பேரணி

கிருஷ்ணகிரியில் இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி, சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி, சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பெருமாள்சாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலத் துணைத் தலைவா் திருநாவுக்கரசு, மாவட்ட மகளிா் பிரிவு செயலாளா் சூசன் பெட்ரியியா, மாநில துணைச் செயலாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்தப் பேரணி, காந்தி சிலை வழியாகச் சென்று, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்றோா் கூறுகையில் ‘3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு, 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பருவத்தோ்வு என்பது நாட்டின் ஏழை, எளிய கிராமப்புறத் குழந்தைகளின் கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதோடு, மாணவா்களின் இடைநிற்றலை அதிகரிக்கும். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அது பற்றி தேசிய கல்விக் கொள்கையில் இல்லாதது இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் கல்வி வாய்ப்பை மிக கடுமையாக பாதிக்கும். மும்மொழிக் கொள்கை என்பது குழந்தைகளின் கல்விச் சுமையை அதிகரிப்பதோடு, தாய்மொழி வழிக் கல்வியை கேள்விக்குறியாக்கும். இது போன்ற கோரிக்கைகளை தேச நலன், ஊழியா் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com