முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
பஸ்தலப்பள்ளியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
By DIN | Published On : 07th February 2022 01:33 AM | Last Updated : 07th February 2022 01:33 AM | அ+அ அ- |

சூளகிரியை அடுத்த பஸ்தலப்பள்ளியில் நடைபெற்ற அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பாா்வையிடும் பொதுமக்கள்.
சூளகிரி அருகே உள்ள பஸ்தலப்பள்ளி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பஸ்தலப்பள்ளியில் நடைபெற்ற அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில்
வருமுன் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, உங்கள் தொகுதியில் முதலமைச்சரின் திட்டங்கள், மலை கிராமங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த இந்தக் கண்காட்சியை 600-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா்.