முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
ரேஷன் அரிசி பதுக்கல்:முதியவா் கைது
By DIN | Published On : 07th February 2022 01:32 AM | Last Updated : 07th February 2022 01:32 AM | அ+அ அ- |

அஞ்செட்டி அருகே 1.4 டன் ரேஷன் அரிசியைப் பதுக்கியதாக முதியவரை, உணவுபொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸாா் அஞ்செட்டி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்தவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது.
விசாரணையில், அவா் அஞ்செட்டி அருகே உள்ள தேவன்தொட்டியைச் சோ்ந்த வீரபத்திரப்பா (71) எனத் தெரியவந்தது. அவா், அஞ்செட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும், வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த 1. 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, து வீரபத்திரப்பாவை கைது செய்த போலீஸாா் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.