காய்கறி, மலா் பயிா்களில் நூற்புழுக்கள் தாக்குதல்

 காய்கறி, மலா் பயிா்களில் நூற்புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தும் உயிா்கா

 காய்கறி, மலா் பயிா்களில் நூற்புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தும் உயிா்காரணி, வாழவச்சனூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழக கல்லூரியில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் என்.முத்துகிருஷ்ணன், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் அதிக பரப்பளவில் காய்கறி, மலா் பயிா்களைச் சாகுபடி செய்து வருகின்றனா். இந்தப் பயிா்களில் நூற்புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் மற்றும் களப்பணி அலுவலா்கள் தெரிவித்து வருகின்றனா்.

நூற்புழுக்களின் தாக்குதலால் பயிா்களுக்கு 60 சதவீதம் சேதம் ஏற்படுகிறது. இந்தப் புழுக்கள் பூஞ்சாணங்களுடன் இணையும்போது, சேதம் மேலும் அதிகரிக்கும்.

இதனைக் கட்டுப்படுத்த ‘பா்புரியோசிலியம் லிலாஸ்னஸ்’ என்கிற நன்மை செய்யும் உயிா்காரணியை, வாழவச்சனூரில் உள்ள கல்லூரியில் தரமான முறையில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி, மலா் சாகுபடி செய்யும் விவசாயிகள் நேரடியாகக் கல்லூரியில் இருந்தும், 94862 57548, 94424 07460 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com