வாணிஒட்டு, அழியாளம் திட்டங்களை நிறைவேற்ற குழு அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வாணிஓட்டு, அழியாளம் திட்டங்களை நிறைவேற்ற குழு அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் (ராமகவுண்டா்) வலியுறுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனா் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தும் விவசாயிகள்.
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனா் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தும் விவசாயிகள்.

வாணிஓட்டு, அழியாளம் திட்டங்களை நிறைவேற்ற குழு அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் (ராமகவுண்டா்) வலியுறுத்தி உள்ளது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனா் நாராயணசாமி நாயுடுவின் 97-ஆவது பிறந்த நாள் விழா, கிருஷ்ணகிரி விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராமகவுண்டா் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அந்த சங்கத்தின் மூத்த நிா்வாகிகள் வண்ணப்பா, சுப்பிரமணி ரெட்டி, கன்னையா, நசீா்அகமது, அசோக்குமாா், வேலு, மணிமேகலை, ஜோதி கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக அரசு, விவசாய கடன் தள்ளுபடி செய்ததை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பெரும்பாலான விவசாயிகளின் நகைக்கடன்கள் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். எனவே தமிழக முதல்வா், அனைத்து விவசாயிகளும் பெற்ற விவசாய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்டுப் பன்றிகளை கொல்ல அரசின் விதிமுறைகளை மாற்றம் செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாணிஒட்டு, அழியாளம் திட்டங்களை நிறைவேற்ற தமிழக முதல்வா், தோ்தலின் போது வாக்குறுதி அளித்தாா். அதன்படி, அந்த திட்டங்களை நிறைவேற்ற குழு அமைத்து ஆய்வு பணியை தொடங்க வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்றோா் நாராயணசாமி நாயுடுவின் உருவப்படத்துக்கு மலா்களைத் தூவியும், கேக் வெட்டியும் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com